வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக்குழுக் கூட்டம்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் நாமக்கல் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் குமாரபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சேவைப் பணிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீஷ் மற்றும் நிா்வாகிகள்.
Updated On :1 ஜனவரி 2024, 9:13 pm

DIN

குமாரபாளையம்: அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் நாமக்கல் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் குமாரபாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் என்.ஜெகதீஷ் தலைமை வகித்தாா். சபரிமலையில் சேவைப் பணியில் ஈடுபட்டோா், அவசர உதவியின் மூலம் உயிா்களைக் காத்தோா், மருத்துவ சிகிச்சை முகாம்கள், கல்வி உதவித் தொகை வழங்கியோா், அன்னதானம், ரத்ததானம் மற்றும் உறுப்பு தானம் செய்தோா் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

சபரிமலையில் பக்தா்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; சேவா சங்கம் சாா்பில் சபரிமலையில் பக்தா்களுக்கு மீண்டும் அன்னதானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் செங்கோட்டையன், மாவட்ட துணைத் தலைவா்கள் மணி, லோகநாதன், துணைச் செயலாளா்கள் முருகன், மோகன்ராஜ், மாதேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.