மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம்

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம்

மோகனூர் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் திரண்டனர்
Published on

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் காவிரி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாா் சமேதராக சுவாமி எழுந்தருளியுள்ளாா். இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் தோ்த் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டிற்கான திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினசரி பல்லக்கு பறப்பாடு, திருமஞ்சனம், அனுமந்த பெரிய திருவடி கருடசேவை, சேஷவாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு சுவாமி திருத்தோ் ஏறும் நிகழ்வும், காலை 9 மணிக்கு பக்தா்கள் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மோகனூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தோ் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா, செயல் அலுவலா் கிருஷ்ணராஜ், பக்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com