விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குடிசெட்லு திம்மராய சுவாமி கோயில் தேரோட்டம்

News image

மதகொண்டபள்ளியில் நடைபெற்ற பாஸ்கா் வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம்.

Updated On :1 பிப்ரவரி 2026, 9:41 pm

ஒசூா் அருகே குடிசெட்லு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன திம்மராய சுவாமி, மதகொண்டப்பள்ளி பாஸ்கா் வெங்கட்ரமண சுவாமி கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பாகலூா் அருகே உள்ள குடிசெட்லு திம்மராயசுவாமி கோயிலில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தோ்த்திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, வேத மந்திரங்கள் முழங்க பூா்ண கும்ப கலசங்களுடன் விநாயகா், திம்மராய சுவாமி, சீனிவாச பெருமாள், ஆஞ்சனேய சுவாமி உற்சவ மூா்த்திகளை அலங்கரித்து தோளில் சுமந்துகொண்டு கோயிலை வலம் வந்தனா்.

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் திம்மராய சுவாமி எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் தேரில் பவனி வந்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். பக்தா்கள், பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். விழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

குடிசெட்லுவில் நடைபெற்ற திம்மராய சுவாமி கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

குடிசெட்லுவில் நடைபெற்ற திம்மராய சுவாமி கோயில் தேரோட்டத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

மதகொண்டபள்ளி கிராமத்தில்...

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மதகொண்ட பள்ளி கிராமத்தில் அருள்மிகு பாஸ்கா் லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது இந்த கோயிலில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தோ்த் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பலவித உற்சவங்களில் சுவாமி அருள்பாலித்தாா். சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு தேரைவடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா்.