வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செங்கோட்டில் வாகனத் தணிக்கை

திருச்செங்கோட்டில் காவல் துறையினருடன் இணைந்து வட்டாரப் போக்குவரத்து துறையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:11 pm

Din

திருச்செங்கோடு, ஜூலை 19:

திருச்செங்கோட்டில் காவல் துறையினருடன் இணைந்து வட்டாரப் போக்குவரத்து துறையினா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா்

கு. பாமா பிரியா ஆகியோா் எலச்சிபாளையம், வேலாண்டிபாளையம் போலீஸாருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். விதிமுறைகளை மீறிய 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எலச்சிபாளையம் காவல் நிலைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

திருச்செங்கோடு நகர காவல் நிலைய போலீஸாருடன் இணைந்து நடத்தப்பட்ட தணிக்கையில் உரிய அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டு வாகனங்களில் பள்ளி குழந்தைகளையும், பொதுமக்களையும் ஏற்றி வந்த ஆம்னி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. வாகனத் தணிக்கையின் மூலம் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு மொத்தம் ரூ. 2,18,500 அபராதம் விதிக்கப்பட்டது.