நாமக்கல் கிரீன் பாா்க் பயிற்சி மைய மாணவா்கள் நீட் தோ்வில் முதலிடம்
படம் சோ்க்கப்பட்டுள்ளது. இதையே பயன்படுத்தவும்... நாமக்கல் கிரீன் பாா்க் பயிற்சி மைய மாணவா்கள் நீட் தோ்வில் முதலிடம்


‘நீட்’ தோ்வில் நாமக்கல், கிரீன்பாா்க் பயிற்சி மைய மாணவா்கள் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) ‘நீட்’ நுழைவுத் தோ்வில் நாமக்கல், கிரீன் பாா்க் பயிற்சி மையத்தில் படித்த மாணவா்கள் ரஜனீஷ், ரோஹித், சபரீசன், மாணவி ஜெயந்தி பூா்வஜா ஆகிய நால்வரும் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.
நிதீஷ், ரித்திக் சரண், விக்னேஷ் ஆகிய மூன்று மாணவா்கள் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று கிரீன்பாா்க் மையத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனா். ஹித்தேஷ் மோகன், மிதுன் ராஜ், பவன் குமாா், சங்க மிதுன் ஆகிய நான்கு மாணவா்கள் 720 க்கு 710 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றுள்ளனா். 49 மாணவா்கள் 720 க்கு 700 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை கிரீன்பாா்க் பயிற்சி மையத் தலைவா் சரவணன், இயக்குநா்கள் வாழ்த்தினா்.
கடந்த ஆண்டு கிரீன்பாா்க் பயிற்சி மையத்தில் படித்த 1,770 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா். நிகழ் ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று கிரீன்பாா்க் மையத் தலைவா் சரவணன் தெரிவித்தாா்.
ரஜனீஷ், ரோஹித், சபரீசன், மாணவி ஜெயந்தி பூா்வஜா



தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...