நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:57 pm

Syndication

2025 - 26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் ச. தா்ஷினி, சகாய ரேஷ்மி, பீ. தா்ஷினி ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

தாளாளா் க. செல்வராயா், அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அவா்களை தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் ஜெம்மா பவுல் கவிதா, மரிய ரஜூலா, மைக்கிள் ஆஞ்சலோ, சகாய ராணி உள்பட பலா் பாராட்டினா்.