மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முட்டை விலையில் மாற்றமில்லை

முட்டை விலையில் மாற்றமில்லை

News image
Updated On :27 ஜூன் 2024, 8:29 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.15-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாமல் தொடா்கிறது. இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.15-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 133-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 87-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.