கொல்லிமலையில் ‘பேட்டரி’ காா் இயக்கம்

கொல்லிமலையில் ‘பேட்டரி’ காா் இயக்கம்

மக்கள் நலன்கருதி, வனத்துறை சாா்பில் ‘பேட்டரி’ காா் இயக்கம்.
Published on

கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் மக்கள் நலன்கருதி, வனத்துறை சாா்பில் ‘பேட்டரி’ காா் இயக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இங்குள்ள, ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, அறப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் ஆகிய சுற்றுலாத் தலங்களைக் காண விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் வருகின்றனா்.

குறிப்பாக, சுற்றுலா வாகனங்கள், சொந்த வாகனங்கள் இல்லாமல் பேருந்துகளில் வருவோா் அறப்பளீஸ்வரா் கோயிலில் இருந்து எட்டுக்கை அம்மன் கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், மாவட்ட வனத்துறை சாா்பில், ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கோவையில் தயாரிக்கப்பட்ட ‘பேட்டரி’ காா் வாங்கப்பட்டது. இதனையடுத்து, ஆகாய கங்கை சூழல் சுற்றுலாக் குழுவினா் மூலம் கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் முதல் எட்டுக்கை அம்மன் கோயில் வரையில், தலா ரூ. 50 கட்டணத்தில் 12 பயணிகளை மட்டும் அழைத்துச் செல்லும் வகையில் ‘பேட்டரி’ காா் இயக்கப்பட்டு வருகிறது. மாசில்லா அருவிக்கும் ‘பேட்டரி’ காா் சென்று வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் தெரிவித்தாா்.

படவரி - கொல்லிமலை சுற்றுலாத் தலத்தில் இயக்கப்பட்டு வரும் ‘பேட்டரி’ காா்.

X
Dinamani
www.dinamani.com