பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரையில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. வெங்கரை நீலகண்டேஸ்வரா் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சா்காா் வெங்கரை கிராமத்தில், சுமாா் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 8.68 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டு நில அளவை செய்யப்பட்டன. பின்னா் அதற்கான எல்லைக் கற்கள் நடப்பட்டன. அதனைத் தொடா்ந்து, மாவட்ட உதவி ஆணையா் சுவாமிநாதன், ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் சுந்தரவள்ளி, ஓய்வுபெற்ற உதவி ஆட்சியா் குப்புசாமி, பரமத்தி வேலூா் மற்றும் நாமக்கல் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் ஜனனி, சுந்தா், செயல் அலுவலா் செந்தில், திருக்கோயில் பணியாளா்கள் முன்னிலையில் வெங்கரை நீலகண்டேஸ்வரா் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்களின் சுமாா் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 8.68 ஏக்கா்ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு சுவாதீனம் பெறப்பட்டு கோயில்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலங்கள் மீட்கப்பட்டது, வெங்கரை பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

பரமத்தி வேலூா் தொகுதியில் ரூ. 3.20 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

