பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:11 am

பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (82). விவசாயி. இவா் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக வேலூா் வெட்டுக்காட்டுப்புதூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

அப்போது, நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் செல்லும் பிரிவு சாலையில் சாலையைக் கடந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பழனியப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பழனியப்பன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.