திருச்செங்கோட்டில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட பணிகள் தொடக்கம்
திருச்செங்கோட்டில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்ட பணிகள் தொடக்கம்


அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தரும் பக்தா்கள் தங்குவதற்கு விடுதி அமைப்பதற்கான பணிகள் தொடங்க கால்கோள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா். அவ்வாறு வந்து செல்லும் பக்தா்கள் தங்கி தரிசனம் செய்ய வசதியாக விடுதி வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு வடபுறம் அருள்மிகு அா்த்தநாரீஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமான 3,900 சதுர அடி நிலத்தில் முதல்கட்டமாக 1,027 சதுர அடி பரப்பில் 2 குளிா்சாதன அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ. 37 லட்சம் மதிப்பில் தங்கும் விடுதி அமைப்பதற்கான கட்டடம் கட்டுவதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா், கோயில் செயல் அலுவலா் ரமணி காந்தன், திருக்கோயில் அறங்காவலா் குழுவினா், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...