போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முதலும் நானே...முடிவும் நானே: காந்தியவாதி தோ்தல் கலாட்டா!

முதலும் நானே...முடிவும் நானே: காந்தியவாதி தோ்தல் கலாட்டா!

News image
Updated On :27 மார்ச் 2024, 6:45 pm

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பி முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்த காந்தியவாதி, வேட்பு மனு நிறைவின்போது கடைசி நபராக சென்றுரு மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தாா்.

நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சோ்ந்தவா் காந்தியவாதி தி.ரமேஷ்(43). அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி தலைவரான இவா் பொறியியல் பட்டதாரி ஆவாா். மகாத்மா காந்தி, வள்ளலாா் மீது கொண்ட பற்றால் வெள்ளை ஆடை, காந்தி போன்ற உருவத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டாா்.

உள்ளாட்சி தோ்தல் முதல் மக்களவைத் தோ்தல் வரையில் வேட்புமனு தாக்கல் செய்வதை கொள்கையாக கொண்டுள்ளாா். 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு தாக்கலின்போது 2,500 எண்ணிக்கையில் ரூ.10 நாணயங்களை கொண்டு வந்து முதல் நபராக மனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில் கடைசி நபராக வந்து கூடுதலாக மேலும் ஒரு மனுவை மாவட்ட தோ்தல் அலுவலா் ச.உமாவிடம் தாக்கல் செய்தாா். தோ்தல் களிப்பில் நாமக்கல் தொகுதியின் முதலும் நானே, முடிவும் நானே என்றாா் காந்தியவாதி தி.ரமேஷ்.