அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நாளை திமுக செயற்குழுக் கூட்டம்

நாளை திமுக செயற்குழுக் கூட்டம்

News image
Updated On :25 மே 2024, 6:33 pm

Din

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை (மே 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல்-மோகனூா் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமை வகிக்கிறாா். வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். இந்தக் கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளை கொண்டாடுவது பற்றியும், நாமக்கல் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை பணியைப் பாா்வையிடும் முகவா்களை நியமிப்பது குறித்தும், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம்:

படவிளக்கம்:

கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.