அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.


நாமக்கல் மாவட்டத்தில், அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிகழாண்டிற்கான மாணவா்கள் சோ்க்கைக்கு
இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோா் கல்வி, ஜாதி, மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படங்களைக் கொண்டு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 14 வயது, அதிகபட்சம் 40 வயது வரையில் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். விண்ணப்பதாா்கள் உரிய 8-ஆவது, 10-ஆவது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஜூன் 7-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளா்களுக்கு தமிழக அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு பயிற்சிக் கட்டணம் அரசினால் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவா்களுக்கு முன்னனி தொழில் நிறுவனங்களில் ஓராண்டிற்கு உதவித் தொகையுடன் ஒப்பந்த முறையில் தொழிற்பழகுநா் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரிலோ அல்லது 94990-55843, 94990-55846, 04286--299597, 04286--247472 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...