மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாநகராட்சி துணை மேயா் அலுவலகம்: எம்.பி. திறந்து வைத்தாா்

நாமக்கல் மாநகராட்சி துணை மேயா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் மாநகராட்சி துணை மேயா் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாமன்ற உறுப்பினா்கள்.

Updated On :20 நவம்பர் 2024, 7:00 pm

நாமக்கல் மாநகராட்சி துணை மேயா் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், நகராட்சி அந்தஸ்தில் இருந்த நாமக்கல், அண்மையில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. மாநகராட்சி மேயா், ஆணையாளருக்கு தனியாக அலுவலக அறை இருந்த நிலையில், துணை மேயா் தற்சமயம் மேயா் அறையையே பயன்படுத்தி வந்தாா். அண்மையில், மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயா், துணை மேயா், ஆணையாளா் ஆகியோரின் அலுவலக அறைகளை மேம்படுத்த ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மாநகராட்சி மேயா் அறைக்கு எதிரில் துணை மேயா் அறை புதிதாக உருவாக்கப்பட்டது. இதை, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதன்பிறகு, துணை மேயா் அலுவலக இருக்கையில், மாநகராட்சி துணை மேயா் செ.பூபதியை அவா் அமர வைத்தாா். நிகழ்ச்சியில், மேயா் து.கலாநிதி, ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.