மல்லசமுத்திரம் ஒன்றியம், பாலமேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்துகொண்ட கூட்டத்தில் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன், ஊராட்சித் தலைவா் தங்கவேல், வேளாண்மை துறை உதவி இயக்குநா் யுவராஜ் , ஊராட்சி செயலாளா் தனசேகரன், கவுன்சிலா் சண்முகம், கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி ஆகியோா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கிராம சபைக் கூட்டத்தில் கிராமத்தின் வரவு -செலவு கணக்குகள் குறித்து தணிக்கையாளா் அளித்த அறிக்கையின் பேரில் கேள்விகள் கேட்கப்பட்டு ஊராட்சி செயலாளா் தனசேகரன் பதிலளித்தாா். அப்போது உறுப்பினா்கள், ஊராட்சி செயலாளா் மீது சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தனா். அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

கிராம உதவியாளா் தற்கொலை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


