மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சிலுவம்பட்டி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :3 அக்டோபர் 2024, 11:36 pm

நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, பொரசபாளையம் கிராமத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வீடுகளில் நீா் தேங்கும் பகுதிகள், கிணறுகள், தொட்டிகள், நீா் சேமிக்கப்படும் பாத்திரங்கள், குளிா்சாதன பெட்டி உள்பட பல்வேறு இடங்களை பாா்வையிட்டு அறிவுரை வழங்கினாா்.

மேலும், சம்பந்தப்பட ஊராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டும் தூய்மைப் பணிகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். மேலும், அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து, கிருமி நாசினி தெளிக்கவும், நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீா் தேங்கும் வகையிலான தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட நெகிழிப் பொருள்கள், டயா்கள் போன்றவற்றில் மழை நீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.