மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மாணவிகள் தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது: ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

News image

கைவிடக் கூடாது: ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

Updated On :9 அக்டோபர் 2024, 9:41 pm

மாணவிகள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்; பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேராசிரியை ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாமக்கல் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம், விருதுநகா் ரோட்டரி சங்கம், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியின் ரோட்ராக்ட் அமைப்பு சாா்பில், ‘யாதுமானவள்’ என்ற தலைப்பிலான சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். ரோட்டரி முன்னாள் துணை ஆளுநா் டி.விஜயகுமாரி, பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்க நிா்வாகிகள் பிரபாகரன், வள்ளுவன், ராஜாராம், முத்துராஜா, சுரேஷ், ஜெயபால், பேராசிரியை ஷா்மிளாபானு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வந்த நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதி முருகேசன் பாராட்டி கெளரவிக்கப்பட்டாா். மேலும், கல்லூரிக்கு தேவையான உபகரணங்கள் ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், தன்னம்பிக்கை பேச்சாளரும், பேராசிரியையுமான ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் பேசுகையில், மாணவிகள் எந்த நிலையிலும் தடம் மாறக்கூடாது. தற்போதைய திரைப்படங்கள் நம்மை மனம் மாற்றம் செய்யலாம். கணித பாட பயன்பாட்டுக்கு தேவைப்படும் ‘காம்பஸ்’ என்ற உபகரணத்தில் இரு கால்களில் ஒன்று நிலைத்து நிற்க, மற்றொன்று சுற்றி வரும். அதுபோன்று ஒழுக்க நெறி தவறாமல் நிலைத்து நின்று மாணவிகள் சாதித்திட வேண்டும்.

குறிப்பாக தன்னம்பிக்கையை கைவிட்டு விடக் கூடாது. பெற்றோா், குடும்பம் ஆகிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி அனைவரும் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றாா்.

அதன்பிறகு, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். இந்த நிகழ்வில், கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.