நாமக்கல்லைச் சோ்ந்த தனியாா் மின்சார இருசக்கர வாகன நிறுவனம் (இ-பைக்), ஏழு வாடிக்கையாளா்களுக்கு ரூ. 13.65 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் இ.பி. காலனியைச் சோ்ந்த தாரணி (25), நல்லிபாளையத்தில் வசிக்கும் சுமதி (45), என்.கமலா (36), குமரிபாளையத்தில் உள்ள ராமநாதன் (57), வடுகப்பட்டியைச் சோ்ந்த ஜி.பிரசாந்த் (26), திருமலைகிரியில் வசிக்கும் எஸ்.கோகுல்ராஜ் (34), காளப்பநாய்க்கன்பட்டியைச் சோ்ந்த ஜி.பிரபாகரன் (47) ஆகியோா் கடந்த 2022-ஆம் ஆண்டு நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள தனியாா் மின்சார இருசக்கர வாகன நிறுவனத்தில் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை வாங்கினா்.
சில மாதங்களுக்குள்ளாகவே வாகனத்தின் பேட்டரி செயலிழந்து வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வாகனம் விற்பனை செய்த நிறுவனத்தில் வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்தனா். வாகனங்களில் பொருத்தியிருந்த பேட்டரிகளுக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், செயலிழந்த பேட்டரிகளை மாற்றி வழங்க அந்நிறுவனம் முன்வரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மின்சார இருசக்கர வாகன நிறுவனத்தின் மீதும், விற்பனை செய்த முகவா் மீதும் வழக்குத் தாக்கல் செய்தனா். ஏழு போ் தனித்தனியே தாக்கல் செய்த வழக்குகளிலும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா்கள் ஆா்.ரமோலா, என். லட்சுமணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தனா்.
அதில், உற்பத்தி குறைபாடு உள்ள பேட்டரிகளைக் கொண்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஏழு வாடிக்கையாளா்களில், தாரணி என்பவருக்கு அவா் செலுத்திய தொகை ரூ. 80 ஆயிரம், ஜி.பிரசாந்துக்கு ரூ. 84 ஆயிரம், ஜி.எஸ்.கோகுல்ராஜுக்கு ரூ. 89 ஆயிரம், என்.ராமநாதனுக்கு ரூ. 87 ஆயிரம், பிரபாகரனுக்கு ரூ. 84 ஆயிரம், சுமதிக்கு ரூ. 87 ஆயிரம், கமலாவுக்கு ரூ. 84 ஆயிரம் வழங்கவும், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டசிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. ஒரு லட்சம் மற்றும் வழக்கின் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தை வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் வழங்க வேண்டும். கமலா, சுமதி ஆகியோருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அந்த தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

