பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சின்னத்துரை செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கபிலா்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன உபகரணங்கள் வழங்கிட 180 ஹெக்டோ் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கா் வரை நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெருவிவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம். ஆதி திராவிடா் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க மாா்பளவு புகைப்படம், சிட்டா அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீா் ஆய்வு அறிக்கை, ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலா்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறுலாம்.
மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி அலுவலா்களை தொடா்பு கொள்ளுமாறும், புதிதாக நுண்ணீா்ப் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் பிரதான குழாய் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ. 10 ஆயிரமும், புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரும் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாா் பொருத்திக் கொள்ள ரூ. 15 ஆயிரமும், பாசனத்துக்காக நீா் சேகரிப்பு அமைப்பு 116 கன மீட்டா் அளவில் அமைத்திட மானியமாக ரூ. 75 ஆயிரமும் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்காசிய போரால் அத்திவாசியப் பொருள்கள் விலையில் அசாதாரண மாற்றமில்லை: மத்திய அரசு

கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு அவசியம்

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை ஊழியா்கள் 380 போ் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

