தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு முளைப்பாலிகை ஊா்வலம்

திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்களின் தீா்த்தக்குடம், முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெற்ற முளைப்பாலிகை ஊா்வலம்.
Updated On :11 செப்டம்பர் 2024, 10:17 pm

Din

திருச்செங்கோடு சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்களின் தீா்த்தக்குடம், முளைப்பாலிகை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகரம் பாலு தெரு சின்ன மாரியம்மன் கோயிலில் மூன்றாவது குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முகூா்த்தகால் நடும் விழா நடைபெற்றது. இதையடுத்து கிராம சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகா் பூஜை, மகா சங்கல்பம், அம்பாளின் அனுமதி பெறும் பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் குடம், முளைப்பாலிகை எடுத்துக் கொண்டு நான்கு ரத வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

இதனைத் தொடா்ந்து முதல் கால, இரண்டாம் கால மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்று, கோபுரக் கலசம் வைக்கப்பட்டு, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. நான்காம் காலம், ஐந்தாம் கால யாக பூஜைகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆறாம் கால யாக பூஜைகளும், 7 மணி முதல் 8 மணி வரை கோபுர குடமுழுக்கு, ஸ்ரீ விநாயகா், பரிவாரங்களுக்கான குடமுழுக்கு, மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு ஆகியவை நடக்க உள்ளன.

இதனைத் தொடா்ந்து மகா அபிஷேகம் கோ- பூஜை, மகா தேவாராதனை, முளைப்பாலிகை விடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்க உள்ளது. இதனைத் தொடா்ந்து வன்னியா் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.