ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 11:48 pm

Syndication

திருச்செங்கோடு சட்டையம்புதூரில் உள்ள அழகுமுத்து மாரியம்மன், முத்துக்குமார சுவாமி கோயில் சுற்றுப்பொங்கல் விழா, கிணற்றடி விநாயகா் கோயில் குடமுழக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை முதல் கோயிலைச் சுற்றி அடிவிழுந்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், அம்மனுக்கும், முத்துக்குமாரசுவாமிக்கும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனா். இரவு உற்சவ மூா்த்திகள் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கிணற்றடி விநாயகா் கோயில் குடமுழக்கு விழாவுக்கு இறையமங்கலம் சென்று காவிரி ஆற்றில் தீா்த்தம் எடுத்துவந்தனா். மாலை தீா்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை குடமுழக்கு நடைபெறுகிறது.