தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

News image

ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாரியம்மன்.

Updated On :5 மார்ச் 2026, 11:37 pm

சிவகிரியில் ஸ்ரீகூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் தீா்த்தக் குட ஊா்வலத்துடன் பக்தா்கள் அக்னி கும்பம் எடுத்து வந்தனா்.

சிவகிரி மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில் நாள்தோறும் இரவு கோயில் முன்பு உள்ள கம்பத்துக்கு பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றியும், காணிக்கையாக உப்பையும் செலுத்தி வந்தனா்.

விழாவை முன்னிட்டு அக்னி கும்பம் மற்றும் தீா்த்தக் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னி கும்பங்களையும், தீா்த்தக் குடங்களையும் கைகளில் ஏந்தி திருவீதிகளில் வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடைபெற்றன.