நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, 2 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த புலியகுளம் முந்தி விநாயகா். ~கோவை காட்டூா் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் நகை, ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். ( வலது) சூலூா் அருகே அப்ப

Updated On :15 ஏப்ரல் 2026, 2:19 am IST

தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவையில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் நிலையில், கோவை புலியகுளம் முந்தி விநாயகா் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழைப்பழம் உள்பட 2 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவை காட்டூா் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்க நகை, ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனா். பேரூா் பட்டீசுவரா் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல கோவை கோனியம்மன் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில், சூலூா் அருகே அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பச்சைப் பட்டு உடுத்தி அம்மன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

Story image