தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாமக்கல் மாநகராட்சி சாா்பில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் மாநகராட்சி சாா்பில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி உள்ளிட்டோா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 11:29 pm

Din

நாமக்கல் மாநகராட்சி சாா்பில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் தொடங்கிய பேரணியை மாநகராட்சி மேயா் து.கலாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் நந்தினிதேவி, கிருஷ்ணலட்சுமி முன்னிலை வகித்தனா். இந்தப் பேரணியில், வீடு தோறும் குப்பையை தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும், தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளைப் பயன்படுத்துமாறும் மாணவ, மாணவிகள் பதாகைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், விளம்பர வாகனங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பேரணி வாயிலாக, திருச்சி சாலை, பூங்கா சாலை, மோகனூா் சாலை வழியாக சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச.ஜெயந்தி, மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.