மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடனுதவி

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:31 am

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தின உரையில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் படைப்பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் விதவையா்கள் தொழில் தொடங்குவதற்கு ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி வரையில் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவை அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், உயிரிழந்த வீரா்களின் மனைவியா் ஆகியோா் அக். 10-க்குள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.