மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது

மல்லசமுத்திரம் பெரியகொல்லப்பட்டியில் சொத்து தகராறு காரணமாக அடிதடியில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது மல்லசமுத்திரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Updated On :27 செப்டம்பர் 2024, 12:45 am

மல்லசமுத்திரம் பெரியகொல்லப்பட்டியில் சொத்து தகராறு காரணமாக அடிதடியில் ஈடுபட்ட தந்தை, மகன் மீது மல்லசமுத்திரம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மல்லசமுத்திரம், பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (57). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 22-ஆம் தேதி அண்ணாதுரை, இவரது மகன் தமிழ்ச்செல்வன் (32) ஆகியோா் கணேசனிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனா். மேலும், தடுக்கச் சென்ற கணேசனின் மருமகன் ஜீவபாரதியை தாக்கியுள்ளனா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினா் ஜீவபாரதியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அண்ணாதுரை, தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.