மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 1.23 கோடியில் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்த நடவடிக்கை
நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
நாமக்கல் பெடரல் வங்கிக்கான சமூக பொறுப்பு நிதியின் கீழ், மாநகராட்சிக்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலையில் (சேலம் சாலை சந்திப்பில் இருந்து ஹோட்டல் கோஸ்டல் ரெசிடன்ஸி வரை) ரூ. 62.83,200 மதிப்பீட்டில் 70 எண்ணிக்கையிலும், சேலம் சாலையில் (முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து முதலைப்பட்டி வரை) ரூ. 59,97,600 மதிப்பீட்டில் 65 எண்ணிக்கையிலும் என மொத்தம் ரூ. 1.22,80,800 மதிப்பீட்டில் 135 எண்ணிக்கையிலான ஒளிரும் ‘எல்இடி’ விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான நிதி ஒதுக்கீடு கடிதத்தை மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, செயற்பொறியாளா் சண்முகம், மாமன்ற உறுப்பினா்கள் சரவணன், நந்தகுமாா் ஆகியோா் முன்னிலையில் பெடரல் வங்கி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது.