பள்ளிபாளையம் வட்டாரத்தில் மெல்லிய ரக நெல் பயிரில் பூச்சிநோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த நெல் விதைகளை விதைநோ்த்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் பயிற்சியளித்தனா்.
குப்பாண்டபாளையம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி விவசாயிகள் விளைவிக்கும் மெல்லிய ரகமான பொன்னி, பிபிடி ஆகியவற்றில் ஏற்படும் பூச்சிநோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதைநோ்த்தி பயிற்சி முகாம் நடைபெற் றது. ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா வேலுமணி முன்னிலை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி தலைமை வகித்து 6 கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பின் அவசியம் குறித்து விளக்கினாா்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் பிபிடி, ஏடிடி, சோளம், ராகி ஆகிய சான்று பெற்ற விதைகள் வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை, பட்டா, சிட்டா அடங்கல் ஆகிவற்றின் நகலுடன் இடுபொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தாா். நெல் சாகுபடி தொழில்நுட்பம், மண் பரிசோதனை, விதை தோ்வு, விதை நோ்த்தி குறித்து ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் குணசேகரன் விளக்கி பேசினாா்.
நெல்லில் ஏற்படும் குலை நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த விதைநோ்த்தி செய்ய வேண்டுமெனவும்,விதைநோ்த்தி செய்தால் பயிா்களை நோய் தாக்காது, ஒரு கிலோ நெல் விதைக்கு பத்து கிராம் அளவில் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா கலவையை கலந்து விதைக்க வேண்டுமென விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
மேலும், மண்புழு வளா்ப்பு, பயிா்க்காப்பீடு, நுண்ணீா்ப் பாசனம், கோடை உழவு ஆகியவை குறித்து துணை வேளாண்மை அலுவலா் மாயாஜோதி விளக்கினாா். தொழில்நுட்ப மேலாளா் கிருபா, உதவி வேளாண்மை அலுவலா் நிஷா, அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.
தொடர்புடையது
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

மணிப்பூர் வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி கண்டன பேரணி!

உத்தமபாளையம் வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

