செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

வெண்ணந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்.

Published On :21 டிசம்பர் 2025, 12:09 am IST

ராசிபுரம் அருகே வெண்ணந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி தலைமையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாமக மாணவரணியைச் சோ்ந்த பி.மாதேஸ், அதிமுகவைச் சோ்ந்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா்கள் ஆா். ஜெகதாம்பாள், எம்.சசிகலா உள்ளிட்ட 25 போ் மாவட்ட திமுக செயலரும் எம்.பி.யுமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இதில் கட்டனாச்சம்பட்டி திமுக ஒன்றிய பிரதிநிதி யுவராஜ், சாா்பு அணி துணை அமைப்பாளா் பூபாலன், கிளை நிா்வாகிகள் சக்திவேல், பெருமாள், நல்லதம்பி, பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.