நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: நிா்வாகத்தினருடன் எஸ்.பி. ஆலோசனை

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:13 pm

Din

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அக்கல்லூரி முதல்வா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதனையடுத்து, ஞானசேகரன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி நிா்வாகத்தினரை அழைத்து விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, நாமக்கல் ஆயுதப்படை காவலா் சமுதாயக் கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், கல்லூரி நிா்வாகத்தினா், பாதுகாப்புக் குழுவினா் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள் பேசியதாவது:

அரசு கல்லூரி, தனியாா் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வெளிநபா்கள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக அதுகுறித்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபராக இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

விடுதிகள் உள்ள கல்லூரிகளில் இரவு நேரங்களில் பாதுகாவலா்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறான செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். தனியாக அவா்களை அழைத்து கவுன்சிலிங் அளிக்க வேண்டும். கல்லூரிக்குள் வருவோரின் விவரங்கள், கைப்பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும் என்றனா்.