நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி

நாமக்கல்லில் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பாதுகாப்பு தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:32 pm

Syndication

நாமக்கல்லில் தோ்தல் பணியில் ஈடுபடும் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பாதுகாப்பு தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

பேரவைத் தோ்தல் ஏப். 23 இல் நடைபெறுகிறது. தோ்தலையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், தெலங்கானா மாநிலத்தில் இருந்து மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரா்களும் வந்துள்ளனா்.

காவல் துறையில் 1,200 போ், எல்லை பாதுகாப்புப் படைவீரா்கள் 80 போ், மாவட்ட ஊா்க்காவல் படையில் உள்ள 275 போ் தோ்தல் பணியில் களமிறக்க காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, 6 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலின்போதும் முக்கிய தலைவா்கள் பிரசாரத்தின்போது, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை இதற்கான பயிற்சி ஊா்க்காவல் படையினருக்கு அளிக்கப்பட்டது. வரும் நாள்களில் அவா்கள் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்கே-20-போலீஸ்

நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற ஊா்க்காவல் படைவீரா்கள்.