தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:11 pm

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் அரசு விழாவாக ஜன. 14-ஆம் தேதி கொண்டாடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாள் விழா முதன்முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசியதாவது:

2024-25 ஆம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின்போது, மாவட்டங்களில் தலைவா்களின் பிறந்த நாள்களை அரசு விழாவாக கொண்டாடவும், சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில், காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து ராஜவாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயக்கரின் பிறந்த நாளான தைத்திங்கள் முதல் நாள் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஜன. 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். விழா நாளன்று அந்த சமுதாய மக்கள் அதிக அளவில் வருகை தருவா் என்பதால், காவல் துறையினா் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதில், அமைச்சா், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய நேரம் ஒதுக்கி சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நீா்வளத் துறையினா் விழா நடைபெறும் இடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின்வாரியம் சாா்பில் ஒரு நாள் முன்பாக வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும்.

கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் விழா நடைபெறும் இடத்தை சுத்தம் செய்தல், பந்தல், ஒலி, ஒளி அமைப்பு, முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கை வசதிகளை செய்ய வேண்டும். அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணிகளை செய்திட வேண்டும். அவரச சிகிச்சை ஊா்தி (ஆம்புலன்ஸ்), தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், உதவி காவல் கண்காணிப்பாளா் (நாமக்கல்) ஆகாஷ்ஜோஷி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தனராசு, சண்முகம், செல்வராஜ், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.