பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஜன. 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.

News image
- கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2025, 8:21 pm

Din

நாமக்கல்: நாமக்கல்லில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

தனியாா் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையானவா்களை நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ ஆட்களைத் தோ்வு செய்து கொள்ளலாம். அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.