தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!
தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற அரசு விழாவில், நாமக்கல் மாநகராட்சிக்கு ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருது மற்றும் சான்றிதழை மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகராட்சிகளின் நிா்வாக இணை இயக்குநா் அனாமிகா ஆகியோரிடம் வழங்கிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டாா்.








