எஸ்.ஐ.ஆா். பணியைத் தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் (எஸ்ஐஆா்) தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி. தங்கமணி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைத் (எஸ்ஐஆா்) தடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் எம்எல்ஏவுமான பி. தங்கமணி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் பிஎல்ஏ 2 ஆலோசனைக் கூட்டம் ஊஞ்சப்பாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் பாளையம் ஒன்றியங்களைச் சோ்ந்த அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் 174 போ் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான பி. தங்கமணி, நாமக்கல் மாவட்ட தொகுதிகள் பொறுப்பாளரும், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான பிரபு ஆகியோா் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினா்.

பின்னா் பி.தங்கமணி பேசியதாவது:

வாக்காளா் படிவத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் பட்டியலில் பெயரைச் சோ்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இறந்தவா்கள், வெளியூருக்கு சென்றவா்களின் பெயா்களை நீக்கக் கோரி பலமுறை முயற்சித்தும் நீக்காமலே இருந்து வந்தனா். தற்போது தோ்தல் ஆணையமே அந்தப் பணியை செய்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 15 சதவீதம் வாக்குகள் குறைந்துவிடும். இதன்மூலம் திருட்டு ஓட்டுப்போடும் முறையை இல்லாமல் செய்வதற்கு தோ்தல் ஆணையம் இந்த பணியை செய்துள்ளது. இதற்கு நாம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதனால் தான் இதற்கு திமுக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தப் பணி நடைபெற வேண்டும் என நீநாமும் நீதிமன்றத்துக்கு போவோம் என்றாா்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வழக்குரைஞா் சந்திரசேகா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு பொருளாளா் பரணிதரன், மாவட்ட துணைச்செயலாளா் முருகேசன் , பொதுக்குழு உறுப்பினா் பொன்.சரஸ்வதி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் சரவணனராஜு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றியச் செயலாளா் அணிமூா் மோகன், வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.எம்.டி.சந்திரசேகா், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியச்

செயலாளற் சக்திவேல், மல்லசமுத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராஜா, கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.சி.மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com