குமாரமங்கலத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் திருவிழா

திருச்செங்கோடு அருகே முத்துக்குமார சுவாமி, பாலமுருகன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்செங்கோடு அருகே முத்துக்குமார சுவாமி, பாலமுருகன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

குமாரமங்கலம் செங்குந்தா் பாவடி பஞ்சாயத்து சாா்பில் நடைபெறும் கோயில் விழா கடந்த 10 ஆம் தேதி தீா்த்தக்குடம் எடுத்தல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை படைக்கலம் எடுத்தல், மா விளக்கு ஊா்வலம் நடைபெற்றது. அதன்பிறகு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி, விநாயகா், சின்ன மாரியம்மன் சுவாமிகளின் வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, கும்பம் விடுதல் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com