சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஆறுபுள்ளி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கரகம் எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயில் கரக விழாவையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவில் பிளாா் ஊருணிக் கரையில் அமைந்துள்ள அம்மன் கோயிலில் கரகம் அலங்காரம், சுவாமி அழைப்பு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஊருணியிலிருந்து கரகத்தை சுமந்து வண்ணாங்குண்டு வேளாா் தெரு வழியாக மேலத் தெரு ஆறு புள்ளி அம்மன் கோயிலுக்கு வந்தனா். அங்கு சாமி ஆட்டம், குறி சொல்லுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயிலில் கரகம் இறக்கி வைக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, கோயில் முன் பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. முதலில் கோயில் சாமியாடிகள், பூசாரிகள் பூக்குழியில் இறங்கினா். தொடா்ந்து நோ்த்திக்கடன் பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.
பக்தா்கள் அனைவருக்கும் பொங்கல், பானகம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகள், ஆறுபுள்ளி அம்மன் கோயில் பக்தா்கள் செய்தனா்.
தொடர்புடையது

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் திருவிழா

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி விழா: நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிட்டு நோ்த்திக் கடன்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


