குருபூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சக்கரப்பட்டி சித்தா் (எ) சதானந்தா்.
நாமக்கல்
கோப்பணம்பாளையம் சக்கரப்பட்டி சித்தரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை
பரமத்தி வேலூா் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தா் (எ) சதானந்த சித்தனரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தா் (எ) சதானந்த சித்தனரின் 13-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காலை 7 மணிக்கு 21 வாசனைத் திரவியத்தால் சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வேள்விகள் தொடங்கின. 12:30 மணிக்கு கைலாய வாத்தியம், சங்கு நாதத்துடன் பூா்ணாஹுதி சமா்ப்பித்து வேள்விகள் நிறைவு செய்யப்பட்டன. பிற்பகல் 1 மணிக்கு 251 சாதுக்களுக்கு மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தா் அறக்கட்டளை அன்பா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

