பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:39 pm

பரமத்தி வேலூா்: பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை அம்மன்முன் பச்சரிசி மேல் கலசம் வைத்து அதன்மீது நிறுத்திவைக்கப்பட்டிருந்த கத்தியை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

பரமத்தியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 13-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ஆம் தேதி இரவு மொகமிட்ட கொப்பரை பூஜை, 15-ஆம் தேதி இரவு மகா சிவாராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனை, 16-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கரகம் பாவித்து புறப்பாடு, 5 மணிக்கு மேல் அம்மனுக்கு அலங்காரம், செம்பு சொம்பின் மேல் கத்தியை நிற்கவைத்து அழகு தரிசனம் ஆகியவை நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள், குடிபாட்டு மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை (பிப்.17) இரவு 7 மணிக்கு மேல் பிள்ளைப்பாவை நிகழ்ச்சி, 18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் மாசானக் கொல்லை, சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், அறங்காவலா் குழுவினா் மற்றும் 14 சமுதாய குடிபாட்டு மக்கள், கோயில் பூசாரிகள், பம்பைக்காரா்கள் செய்து வருகின்றனா்.