47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முட்டை விலை ரூ.6.10 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.6.10 ஆக நீடிக்கிறது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:30 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.6.10 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால் இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மாற்றமின்றி ரூ.6.10 ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.100 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.122 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.