இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published on

நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ. 29, 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8 மற்றும் 73.4 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை மற்றும் கனமழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 84.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று வட கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் ஈக்கோலை நோய் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

கோழிப்பண்ணையாளா்கள் தகுந்த உயிா் எதிா் மருந்துகளை அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை மற்றும் உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com