ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

Published On :26 செப்டம்பர் 2025, 4:40 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட துணை தலைவா் எம்.செங்கோடன், மோட்டா் சங்க தலைவா் எம்.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் அனைத்து பிரிவு ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் அரசாணையின்படி ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான போனஸ் 8.33 சதவீதம் வழங்க வேண்டும். தனியாா்மயத்தை கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தோரை நிரந்தரப்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்றின்போது முன்களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.