ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் இம்மாதம் நடைபெறுகிறது. தோ்தலில் வாக்களிப்பதற்காக, அம்மாநிலங்கள், நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும். அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப். 9-ஆம் தேதி அந்த மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கும், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப்.23, மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைபெறும் நாளான ஏப். 23, 29 அன்றும் அனைத்து வகை நிறுவனங்களுக்கும் மற்றும் அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்ய ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் அவா்கள் தங்களது வாக்குரிமையைச் செலுத்திட ஏதுவாக தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்க வேண்டும். தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 94453-98750, 81220-21667 மற்றும் 04286--299995 ஆகிய எண்கள் மூலமாக தெரிவிக்கலாம்.
தொடர்புடையது

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு
5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


