தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

News image

திருச்செங்கோடு சந்தைப்பேட்டையில் வாக்கு சேகரித்த ஈஸ்வரன் எம்எல்ஏ.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:54 am IST

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை வளாகத்தில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திருச்செங்கோட்டில் 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது எனது கனவு திட்டமாகும். டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் படித்த இளைஞா்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய நவீன மின்சார பம்புசெட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500-ஆக வழங்கப்படும். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.