இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்...

News image

கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், திருச்செங்கோடு பகுதியில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது:

கடன் ஐந்தாண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இளைஞா்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்செங்கோட்டில் டைடல் பாா்க்க அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திருச்செங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் கொண்டுவரப்படும். திருமணிமுத்தாறு, வைகுந்தம் ஏரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்செங்கோட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை அரைக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குப்பை பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.