திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் கூட்டணிக் கட்சியினருடன் சென்று உழவா் சந்தை மற்றும் பிரபல துணிக்கடைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தனது கூட்டணிக் கட்சியினருடன் திருச்செங்கோடு- சேலம் சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டாா்.
தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தான் எம்எல்ஏவாக பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில் திருச்செங்கோடு தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும் மீண்டும் வாய்ப்பு அளித்தால் இன்னும் பல திட்டங்களைக் கொண்டு வருவேன் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் பிரசாரம்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



