நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் 1,781 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோா் வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதன்படி, 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 28-இல் நடைபெற்றது. இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை 6 தொகுதிகளுக்கு உள்பட்ட முக்கிய இடங்களில் நடைபெற்றது.
ராசிபுரம் தொகுதியில் 1,368 அலுவலா்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 1,460 அலுவலா்கள், நாமக்கல் தொகுதியில் 1,488 அலுவலா்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 1,288 அலுவலா்கள், திருச்செங்கோடு தொகுதியில் 1,392 அலுவலா்கள், குமாரபாளையம் தொகுதியில் 1,548 அலுவலா்கள் என மொத்தம் 8,544 அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆா்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சியை ஆட்சியா் பாா்வையிட்டு தோ்தல் சிறப்பாகவும், அமைதியாகவும், எவ்வித சிரமமின்றி மக்கள் வாக்களிக்க ஏதுவாகவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பி பங்கேற்ற 8,544 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது, தொகுதி தோ்தல் நடத்தும்அலுவலா்கள், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பை பாா்வையிட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
தொடர்புடையது
நாமக்கல் மாவட்டத்தில் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட செயல்முறை பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

