நாமக்கல் மாவட்டத்தில் தொகுதி தோ்தல் அலுவலகங்களில் காவல் துறை உள்பட தோ்தல் பணிகளில் ஈடுபடுவோா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சல் வாக்களித்தனா்.
வாக்குப்பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி தோ்தல் பணிகளில் ஈடுபடும் காவல் துறை உள்பட பல்வேறு துறை சாா்ந்த 3,339 அலுவலா்கள் அஞ்சல் வாக்களிக்கும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஏப்.19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு சென்று வாக்களிக்கலாம்.
நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகத்திலும், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு மையத்திற்கு வரும் அலுவலா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை அல்லது ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, வங்கிக் கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டைஉள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும்.
காவல் துறை மற்றும் இதர துறையைச் சோ்ந்த அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்கு மையத்தில் மட்டுமே வாக்களிக்க இயலும். வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. வாக்குப்பதிவு மையத்திற்குள் கைப்பேசிகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

விளவங்கோடு, கிள்ளியூா் தொகுதி மண்டல அலுவலா்களுக்குப் பயிற்சி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


