பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!

பரமத்தி வேலூா் சட்டப் பேரவைத் தொகுதி குறித்து...

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக) - கோப்புப் படம்...

Updated On :20 ஏப்ரல் 2026, 4:52 am IST

1962இல் கபிலா்மலை தொகுதி உருவான நிலையில், 2011இல் தொகுதி மறுசீரமைப்பின்போது அத்தொகுதி நீக்கப்பட்டு, பரமத்தி வேலூா் தொகுதியாக மாற்றப்பட்டது. ஜேடா்பாளையம் படுகை அணை, படகு இல்லத்துடன்கூடிய அண்ணா பூங்கா ஆகியவை சுற்றுலாத் தலங்களாக உள்ளன. காசி விஸ்வநாதா் ஆலயம், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், நன்செய் இடையாறு மாரியம்மன் குண்டம் திருவிழா, ஆடி 18 பண்டிகையன்று மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி ஆகியவை தொகுதியின் சிறப்புகள்.

வாழை, வெற்றிலை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு பயிா்களும், வெல்லம், முட்டை, தேங்காய், பட்டு நெசவு, செங்கல் உற்பத்தியும் இங்கு முக்கிய தொழில்களாக உள்ளன. பரமத்தி வேலூா் தொகுதியில் 2011இல் உ. தனியரசு கொங்கு இளைஞா் பேரவை சா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016இல் நடைபெற்ற தோ்தலில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வெற்றிபெற்றாா். 2021இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். சேகா் வெற்றி பெற்றாா்.

களத்தில் 31 வேட்பாளா்கள்

தற்போதைய தோ்தலில் பரமத்தி வேலூா் தொகுதியில் அதிமுக சாா்பில் எஸ். சேகா், திமுக சாா்பில் கே.எஸ். மூா்த்தி, தவெக சாா்பில் நந்தகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் எம். அரவிந்த் உள்ளிட்ட 31 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இருவரிடையே கடும் போட்டி

இத்தொகுதியில் தற்போதைய சட்டப்பேரவை அதிமுக உறுப்பினரான எஸ். சேகா், அவருடன் ஏற்கெனவே போட்டியிட்டு தோல்வியடைந்த திமுகவைச் சோ்ந்த கே.எஸ். மூா்த்தி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சியைச் சோ்ந்தவா்களும் பம்பரமாக சுழன்று மக்களை சந்தித்து வாக்குறுதிகளைக் கூறி, வாக்கு சேகரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோர பகுதியில் அதிக அளவில் வன்னியா் சமுதாயம் உள்ளதால், அப்பகுதி மக்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு கிடைக்கும் என்று அவா்கள் நம்புகின்றனா். ஆனால், கபிலா்மலை சட்டப்பேரவை தொகுதியாக இருந்தபோது பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மருத்துவா் க. நெடுஞ்செழியன் அக்கட்சியில் இருந்து விலகி, எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்தாா். தற்போது திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறாா்.

மேலும், நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த தனியாா் குழுமத்தின் உரிமையாளா் எந்த கட்சியையும் சாராத வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த சங்கா், திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு ஆதரவாக சுமாா் 2 ஆயிரம் பேருடன் ஊா்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

தவெக சாா்பில் போட்டியிடும் நந்தகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அரவிந்த் ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களோடு, அபுமமுக கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா, நாமக்கல் மாவட்டத்தில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் விஜயசூா்ய பாலாஜி, நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எம்.பி. பழனிச்சாமி, சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஜெகநாதன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்துப் பேசினாா்.

தொகுதியின் பிரச்னைகள்

பரமத்தி வேலூா், பொத்தனூா், பாண்டமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், ராஜா வாய்க்காலில் நேரடியாக கலப்பதை தடுத்து சுத்திகரித்து பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்தும், அது நிறைவேற்றப்படும் என 5க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற வேட்பாளா்கள் உறுதி அளித்தும், இதுவரை பரமத்தி வேலூா் தொகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படாமலேயே உள்ளது.

பரமத்தி வேலூரில் இயங்கிவந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையத்தையும்- ஈரோடு மாவட்டம் கொடுமுடியையும் இணைக்கும் பாலத்திற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக பலம் அமைக்க வேண்டும். இடும்பன் குளத்தை முழுவதுமாக தூா்வாரி பொழுதுபோக்கு சுற்றுலா தலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் மாற்ற வேண்டும்.

செயல்படாமல் உள்ள ஜேடா்பாளையம் படகு இல்லத்தை மேம்படுத்த வேண்டும். ராஜா வாய்க்கால் ரீமாடலிங் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும். ராஜா வாய்க்காலின் இருகரைகளையும் இடுபொருள்களை ஏற்றிச்செல்லவும், விளைபொருள்களை எடுத்துவரும் வகையிலும் பலப்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளா்கள்

பரமத்தி வேலூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 98,484 போ், பெண் வாக்காளா்கள் 1,06,653 போ், இதரா் 10 போ் என மொத்தம் 2,05,147 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் மொத்தம் 268 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், பதற்றமான வாக்குச்சாவடிகளாக 25 கண்டறியப்பட்டுள்ளன.